
பாலற்றில் குளித்த இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தமூன்று நண்பர்கள்குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வரும் வழியில் மாமண்டூர் பாலாற்றில் குளிக்கலாம் என இறங்கி உள்ளனர். இதில் சிவசங்கரி(16), சிவஸ்ரீ(11) ஆகிய சிறுமிகள் இருவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபொழுது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் காப்பாற்ற சீனிவாசன் என்பவரும் ஆற்றில் இறங்கினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் சிறுமிகள் இருவரின் உடலை மீட்டுள்ளனர். சிறுமிகளை காப்பாற்ற சென்ற சீனிவாசனை வெகுநேரம்தேடிவந்த நிலையில் அவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Follow Us