Advertisment

'ஆணியில் தூக்கித் தொங்கவிட்டு சித்திரவதை' - சக மாணவர்களால் மாணவனுக்கு நடந்த கொடுமை  

Tragedy happened to a student by fellow students

அண்மையாகவே பள்ளி மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் காரணமாக சக பள்ளி மாணவர்களுக்குள்ளேயே கொடூரமாகத்தாக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நிகழ்ந்த சம்பவம். அதேபோல் கரூரில் நிகழ்ந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் உள்ள கம்மாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாக்கி உள்ளனர். பின்னர் வகுப்பறையில் அடிக்கப்பட்டிருந்த ஆணியில் ஒரு மாணவனையும், கதவில் ஒரு மாணவனையும் சட்டையுடன் தூக்கித்தொங்க விட்டுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் அவரதுபெற்றோர்களுடன்வெளியிட்ட வீடியோவில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தன்னை தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe