The tragedy that happened in front of the father's eyes; A 24-year-old youth passed away

ஈரோடு மாவட்டம் நாதக்காடையூர், கொமரபாளையம், கொல்லன் வலசு காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகன் பெயர் ஜீவா. 24 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜீவா கோவில் திருவிழாவில் டிரம்செட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்று மதியம் ஜீவா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் குடிபோதையில் ஊரில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து தந்தை மற்றும் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீவா கிணற்றுக்குள் தவறி விழ ஜீவாவின் தந்தை மற்றும் அவரது அண்ணன் கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்க முயன்றனர். அதற்குள் ஜீவா கிணற்றுக்குள் மூழ்கி விட்டார்.

Advertisment

பின்னர் இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அரச்சலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.