Advertisment

பள்ளி சென்ற முதல் நாளே நிகழ்ந்த சோகம் - சிறுவனின் உயிரிழப்பால் கண்ணீரில் மூழ்கிய கிராமம்

he tragedy that happened on the first day of school ... The village that was in tears

Advertisment

திருவண்ணாமலையில் ஆரம்பப்பள்ளி சேர்ந்த முதல் நாளே நான்கு வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ளது ஒருகாத்தூர். அவ்வூரில் வசித்து வந்த ஜோதி என்பவருக்கு சர்வேஷ் என்ற நான்கு வயது மகன் இருந்தான். சர்வேஷை ஆரம்பப்பள்ளிக்கு அனுப்பலாம் என முடிவெடுத்த ஜோதி,வாழப்பந்தல் பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா தனியார் பள்ளியில் எல்.கே.ஜியில் சேர்த்தார். நேற்று முதல்நாள் பள்ளிக்குச் சென்ற நிலையில், பள்ளி முடிந்து வேன் மூலம்ஒருகாத்தூரில் சர்வேஷ் இறக்கிவிடப்பட்டான். முதல் நாள் என்பதால் பள்ளி வேன் வரும் நேரம் குறித்து சிறுவன் சர்வேஷின் தாய் ஜோதிக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிற நிலையில், சிறுவனை இறக்கிவிட்ட வேன் ஓட்டுநர் வேனை வலப்பக்கம் திரும்புகையில் வேனின் சக்கரத்தில் தலை நசுங்கி சிறுவன் சர்வேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச்சம்பவம் அந்த சுற்றுவட்டார மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் தாயும் ஊர் மக்களும் சிறுவனின்சடலத்துடன் கண்ணீர் விட்டு அழுதது மனதையே உலுக்கும் விதமாக இருந்தது. சிறுவனின் உயிரிழப்பு தொடர்பாக பெரமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

incident child bus thiruvananamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe