certificate

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவர் பூபதிராஜா. 12 ஆம் வகுப்பு முடித்த பூபதிராஜாவிற்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம். இதற்காக நீட் தேர்வு எழுதிய அவர் 236 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பூபதி ராஜா சிறுவயதாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் அவரது மாமா கணேசனே பூபதிராஜாவை படிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், மருத்துவ கவுன்சலிங்காக பூபதிராஜா தனது மாமா கணேசனுடன் சென்னைக்கு வந்தார். ராணுவ வாரிசுதாரரான பூபதிராஜா தனக்கு ராணுவ வாரிசுதாரருக்கான ஓதுக்கிட்டில் இடம் கிடைக்கும் என நம்பினார். ஆனால் அவரது பெயர் ராணுவ வாரிசுதாரர் பட்டியலில் வரவில்லை. எனினும் எஸ்.சி பிரிவில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே சென்னை வந்துள்ளார்.

stu

அந்தநேரத்தில், பூபதியின் மாமா கணேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால், எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் வைத்திருந்த பையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். திருடர்கள் எடுத்துச்சென்ற பையில் தான் பூபதியின் சான்றிதழ்கள் அனைத்தும் இருந்துள்ளது. இதனால் பதறிப்போனவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

Advertisment

சிறப்புக் கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், பூபதிராஜாவின் மாமா தன்னால் தான் சான்றிதழ் பறிபோனது என நினைத்து கண்ணீருடன் கதறினார். சான்றிதழ்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் மருத்துவர் கனவோடு இருக்கிறார் பூபதிராஜா. திருடுபோன சான்றிதழ்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் கிடைத்தால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பூபதி ராஜாவின் சான்றிதழ்களை யாராவது கண்டறிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய எண் - 8903802743.