Advertisment

காதணி விழா நாளன்றே சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்

Tragedy happened to the boy who went to bathe in the canal on the day of the earring ceremony

Advertisment

கல்லணை கால்வாயில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காதணி விழா நாளென்றே நிகழ்ந்த இந்த சோகம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் இந்தளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி. இவருடைய மகன் சாய்ராம் (14) நேற்று காதணி விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் சாய்ராம் தன்னுடைய அண்ணன் முரளி என்பவருடன் கல்லணை கால்வாயில் வழக்கம் போல் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் சாய்ராம் இழுத்துச் செல்லப்பட்டார். உடன் சென்ற முரளி சாயிராமை காப்பாற்றமுயன்றும்முடியாமல் போனது. தொடர்ந்து போலீஸாருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதலில்சாய்ராம் உயிரிழந்த நிலையில் சாய்ராம் மீட்கப்பட்டார். காதணி விழா நாளென்றே நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

kallanai police Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe