The tragedy that destroyed the house Flying firecrackers in pudukottai

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பட்டாசு தீயால் சேதங்கள் ஆகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தர்மர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (48). இவர் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பூக்கடை வைத்துள்ளார். தீபாவளியான இன்று காலை அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்த போது எங்கிருந்தோ பறந்த வந்த பட்டாசு தீ காமராஜ் வீட்டு மேற்கூறையில் விழுந்து தீ பற்றியுள்ளது.

தீ வேகமாக பரவிய நிலையில் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கீரமங்கலம் தீயணைப்பு துறையினர், தீயை அணைப்பதற்குள் காமராஜ் வீடு முழுமையாக எரிந்துவிட்டது. இதில் வீட்டிற்குள் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.