Tragedy of death of young man stuck in lift

Advertisment

சென்னையில் தனியார் ஓட்டலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் லிஃப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ராதாகிருஷ்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எட்டாவது தளத்திற்கு சர்வீஸ் லிஃப்ட்மூலமாக அங்கு தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த அபிஷேக் என்ற இளைஞர் ட்ராலி ஒன்றை எடுத்துச் சென்றதாகவும் அப்பொழுது இளைஞரின் கால் தளத்திற்கும் லிஃ ப்ட்டிற்கும் இடையே சிக்கிக் கொண்டது. தூய்மை பணியாளர் மாட்டிக் கொண்டநிலையில்லிஃப்ட் மேலே சென்றபோது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்கிற காரணத்தால் சர்வீஸ் லிஃப்டில் இந்த விபத்து நடந்தது தெரியாமல் இருந்தது. நீண்ட நேரமாக சர்வீஸ் லிஃப்ட் வராத காரணத்தினால் சோதித்துப் பார்த்தபோது இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது தெரியவந்தது. லிஃப்டில் சிக்கி உயிரிழந்த அபிஷேக்கின் உடலை மீட்டு ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.