Advertisment

விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்! 

Tragedy for the children who went to the grandmother's house for the holidays!

Advertisment

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அருகே உள்ள கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட சேத்துக்குளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்னையில் பணிபுரியும் சகோதரர்கள், தங்களின் மகள்களான் சுசித்ரா (வயது 11) மற்றும் காமாட்சி (வயது 9) ஆகிய இரண்டு பேரையும் விடுமுறைக்காக அனுப்பியுள்ளனர்.

விடுமுறை முடிந்து சனிக்கிழமை அன்று சென்னைக்கு திரும்ப இருந்த நிலையில், தனது பாட்டி பாப்பாத்தியுடன் சிறுமிகள் காவிரியில் குளிக்க சென்றுள்ளனர். சிறுமிகளைக் குளிக்க சொல்லிவிட்டு, பாட்டி பாப்பாத்தி துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமிகளின் பேச்சு சத்தம் கேட்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த பாப்பாத்தி, கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து தண்ணீரில் மூழ்கித் தேடிப் பார்த்துள்ளனர்.

அப்போது,சேத்துக்குளியில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்த நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

Advertisment

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident water Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe