
சென்னையில் நேற்று (06.09.2021) மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் பெய்த மழையால் மாலை ஆறு மணி முதல் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, மில்லர் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனடியாக உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், சம்பவம்குறித்து விசாரித்துவருகிறார்கள்.
Follow Us