/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/119_16.jpg)
சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே அதிக நேரம் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் திட்டியதால் மகன் உயிரிழந்தாக நினைத்து துக்கத்தில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குன்றத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஒரு மகன் தனியார் பள்ளியில் பத்தாம் படித்து வருகிறார். இந்நிலையில் மகன் அதிக நேரம் செல்போனை உபயோகித்ததால் தந்தை அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் அருகில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் திட்டியதால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டான் என்ற துக்கத்திலிருந்த தந்தை சுந்தரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டுக் குன்றத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)