A tragedy caused by play - a boy fell into a well with a tractor

கள்ளக்குறிச்சியில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாஸ்கல். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மின் மோட்டார் பழுதடைந்ததால் அதனை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.மின்மோட்டாரை கிணற்றுக்குள் இருந்து வெளியே எடுத்து கொண்டிருந்தபொழுது அந்த பகுதியில் டிராக்டர் ஒன்று இயக்க நிலையில் இருந்துள்ளது.

ஜாப்ன் ராஜ் (28), செர்ரிப் (14) டேனிஷ் (7) ஆகிய 3 பேரும் டிராக்டரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென டிராக்டரின் ரிவர்ஸ் கியரை சிறுவர்கள் இயக்கியதால் பின்னோக்கி வந்த டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்தது. இரண்டு சிறுவர்கள் நீச்சல் தெரிந்ததன் காரணமாக வெளியே வந்தனர். ஆனால் இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஏழு வயது சிறுவன் டேனிஷ் என்பவர் நீச்சல் தெரியாததால் உள்ளே சிக்கிக் கொண்டார்.

Advertisment

உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போராடி கிணற்றில் நீரை வெளியேற்றி சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் சிறுவன்டேனிஷ் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.