The tragedy of the boy who went to the field with his mother was electrocuted!

Advertisment

கள்ளக்குறிச்சியில் அம்மாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்வேஸ்வர சுவாமி என்கிற ஆண் குழந்தை உள்ள நிலையில், குழந்தை அழைத்துக்கொண்டு தாய் ராசாத்தி வயலுக்குச் சென்றுள்ளார்.

சர்வேஸ்வர சுவாமி நாளை அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் எல்கேஜி வகுப்பிற்கு செல்ல இருந்தநிலையில் இன்று அம்மாவுடன் வயலுக்கு சென்றுள்ளான். வயலிலேயே ஒருபுறம் குழந்தையை விளையாட விட்டுவிட்டு ராசாத்தி வேலை பார்த்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கு ஏற்கனவே அறுந்து கிடந்த மின்சார கம்பியை குழந்தை கையால் பிடித்திருக்கிறது. திடீரென அலறல் சத்தம் கேட்க, அக்கம் பக்கத்தில் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்த பொழுது, மின்சாரம் தாக்கி சிறுவன்சர்வேஸ்வர சுவாமி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தான். உடனடியாக மின்சாரத் துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டதையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டிப்பு செய்தனர். அதன் பின்னர் குழந்தையின் உடல் அங்கிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாககாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.