காதல் திருமணம் செய்து கொண்ட 24 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி (24). இவரும், நந்தினியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள், இருவரும் சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், காதல் திருமணம் செய்த கார்த்திக் பாண்டியை, அவரது மனைவியின் அண்ணன் பாலமுருகன் படுகொலை செய்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய நந்தினியின் அண்ணன் பாலமுருகன் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.