காற்றுக்காக கதவைத் திறந்துவைத்துத் தூங்கிய ஆசிரியைக்கு பாலியல் வன்கொடுமை

Tragedy befell the teacher who slept with the door open for air

வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி ஆசிரியை ஒருவர், காற்றுக்காகத் திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே 31 வயதுடைய பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணி செய்து வருகிறார். இந்தத்தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. பெரும்பாலும் கணவர் இரவில் ஆட்டோ ஓட்ட சென்றுவிடுவதால் அந்த ஆசிரியை குழந்தைகளுடன் இரவில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கணவர் ஆட்டோ சவரிக்காக வெளியே சென்றுவிட ஆசிரியை தனது குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுவதன் காரணமாக இரவு நேரத்தில் காற்றுக்காகக் கதவைத் திறந்து வைத்துவிட்டு பிள்ளைகளுடன் தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த போதை ஆசாமி ஒருவர் கத்தியைக் காட்டி ஆசிரியையை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ஆசிரியையைக் கத்தி கூச்சலிட முயன்றபோது, பிள்ளைகளைக் கொன்று விடுவதாகக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போதை ஆசாமி தப்பியோட முயன்றபோது, அந்தப் பெண் ஆசிரியை கத்தி கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தப்பியோட முயன்ற போதை ஆசாமியைப் பிடித்து தர்ம அடி கொடுத்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், போதை ஆசாமி கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested koyambedu police woman
இதையும் படியுங்கள்
Subscribe