Plus, the student who came to write the last exam was cut with a sickle; Suffering from a one-sided love affair

Advertisment

தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் பிரச்சனையில் மாணவி ஒருவரை இளைஞர் பள்ளி வாசலிலேயே வைத்துஅரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற இளைஞன் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத்தெரிய வர, மாணவிக்குத்திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் பெற்றோர்.

இன்னும் சில மாதங்களில் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகும் என்ற நிலையில் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். கடைசித்தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு மீண்டும் சோலையப்பன் வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுத்த நிலையில் கையோடு கொண்டு சென்ற அரிவாளை எடுத்து மாணவியை சரமாரியாக சோலையப்பன் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தாக்கி விட்டுத்தப்பிச் செல்ல முயன்ற சோலையப்பனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.