மதுரை மாவட்டம் கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் அங்காள ஈஸ்வரி(13). இவர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி அங்காள ஈஸ்வரி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் வந்த விஷப்பாம்பு ஒன்று தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் அலறல் சத்தம்போட்டு குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.