tragedy that befell a female IT employee who returned home after work

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்பாபு மகள் ஐஸ்வர்யா(25). பொறியியல் பட்டம் படித்து முடித்த ஐஸ்வர்யா தரமணியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு ஐஸ்வர்யா வந்துகொண்டிருந்தார். அப்போது, அண்ணாமலை ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை ஐஸ்வர்யா கடக்க முயன்ற் போது மின்சார ரயில் மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலெயே உயிரிழந்தார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.