வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்; இருவர் கைது

Tragedy befell the father and son who went to water the field

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 55). இவரது மகன் வனராஜ் (வயது 28). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு மணிமுத்தாறு அருகே உள்ள விவசாய நிலத்திற்குத்தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கால்வாய் தண்ணீரில் மர்ம நபர்கள் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மின்வேலி வைத்த மதிவாணன், அலெக்ஸாண்டர் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்குத்தண்ணீர் பாய்ச்சசென்றவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ambasamuthram dad police son Tirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe