Tragedy befell the couple who went to give their son a wedding invitation!

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த அதிவராகநத்தம் கிராமத்தின் அருகே சேலத்திலிருந்து புவனகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது புவனகிரியில் இருந்து சேத்தியாதோப்பு நோக்கி எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்ட நிலையில் அதில் பயணித்த கணவன் ,மனைவி இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி நின்றது. சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த விசாரணையில் உயிரிழந்த கணவன் மனைவி இருவரும் கம்மாபுரம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், விஜயா என்பதும், புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்திற்கு தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.

மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment