Tragedy befell the boys who went to bathe in Pampuset; Villagers in sorrow

விழுப்புரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் கிராமம். இந்தப்பகுதியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சப்தகிரி ஆகிய இரண்டு சிறுவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து வாய்க்கால் தண்ணீரில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் ஒரே இடத்தில் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.