புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏகனிவயல்  கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவரது மனைவி பர்வீன்பீவி (வயது 45) இவர்களுக்குத் தீன், நௌபியா உள்ளிட்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜலாலுதீன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் பர்வீன் பீவி தனது சொந்த ஊரான காரணியேந்தல் கிராமத்தில் தனது மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டில் 4 மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (14.07.2025) மாலை மேய்ச்சலுக்குப் போன மாடுகளைக் காணவில்லை என்று வயல் பகுதிக்கு தனியாகத் தேடிச் சென்றுள்ளார்.

Advertisment

இவ்வாறு மாடுகளைத் தேடிச் சென்ற பர்வீன் பீவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பர்வீன்பீவியை காணவில்லை என ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் இன்று (15.07.20125) காலை அந்த பகுதி இளைஞர்கள் உறவினர்கள் பர்வீன்பீவியை ஊரின் அருகே உள்ள வயல் பகுதியில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது வயல் பகுதியில் இருந்து கண்மாய் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்ட தடம் தெரிந்ததால் அதை வைத்து அருகே உள்ள கருங்குழிகாடு கண்மாய்க்குள் இறங்கித் தேடினர். அப்போது கண்மாய்க்குள் பர்வீன்பீவி மீது துணி துவைக்கப்படும் கற்களைக் கொண்டு உடலில் வைத்து தண்ணீரில் அமுக்கி வைத்துள்ளனர். 

Advertisment

இது குறித்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் வந்து உடலை மீட்டுக் கரைத்துக் கொண்டு வந்தனர். அப்போது ரத்தக்கயங்களுடன் பர்வின் பீவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில் உடலை மீட்டு நாகுடி போலீசார் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதே சமயம் ஆனால் பர்வீன் பீவியின் செல்போன் காணாமல் போய் இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் தேடப்பட்டது.

பர்வீன்பீவியை கொன்ற கொலையாளியைப் பிடிக்கும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். போலீசார் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்த பிறகு சடலத்தைப் பெற்றுக் கொண்டனர். பெண் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் விசாரணை குறித்து ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

Advertisment