Advertisment

கடத்தல் பொருட்களுடன் அகதிகள் உட்பட 6 நபர்கள் கைது..!

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேளையில், தமிழகம் ராமேஸ்வரம் பகுதிகளிலிருந்து கடத்தல் பொருள்கள் இலங்கைக்குக் கடத்தப்பட்டு கொண்டு வருவதாக. ரகசிய தகவலையடுத்து சர்வதேச கடல் எல்லை முதல் காங்கேசன்துறை கடல் வரை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் இலங்கை வடக்கு பிராந்திய கடற்படை அதிகாரிகள்.

Advertisment

shreelanka

ரோந்தின் போது, சந்தேகத்திற்க்கு இடமாக கடலில் நின்று கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த நாட்டு படகை பிடித்து விசாரித்த போது. அப்படகில் இலங்கைக்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட போதை பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூசை. பால்ராஜ், நிரோஜன், திலிபன், ஜெயகரன் உட்பட் ஆறு நபர்களையும் காங்கேசன் துறை போலீஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ராமநாதபுர மாவட்டம்மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், இது போல் வேறு யாரும் கடத்தலில் ஈடுப்பட்டுள்ளார்களா..? என விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

Advertisment
fish sea srilanka Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe