Skip to main content

போக்குவரத்து சிக்னல் இருக்கு ! ஆனால் இயங்கவில்லை !

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

சேலம் மாநகரில் முக்கிய பகுதியாக உள்ளது அம்மாப்பேட்டை பகுதி. இந்த அம்மாப்பேட்டை சாலை என்பது சேலம் பழைய பேருந்து நிலையம் மற்றும்  புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை ஆகும். மேலும் சேலம் - சென்னை மற்றும் கடலூர்  செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த சாலையில் பயணிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் "போக்குவரத்து சிக்னல்" இருந்தும் அது செயல்படவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படுகிறது. 

salem traffic signal problem

மேலும் இந்த பகுதியில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும்  உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த போக்குவரத்து சிக்னல் அமைத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஒரு முறை கூட இந்த சிக்னல் ஆனது செயல்படவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது என்பது அனைவராலும் எளிதில் காண முடிகிறது. மேலும் இந்த சிக்னல் இயங்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கலாம். எனவே சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மக்கள் ஆரோக்கியமான பயணம் மேற்கொள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் ஒவ்வொரு வரும் ஹெல்மெட்  அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதும் , கார்களில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது விபத்துக்கள் இல்லா , உயிர் இழப்புக்கள் இல்லாத அற்புதமான பயணமாக கட்டாயம் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

 

பி. சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கார் முழுக்க அமானுஷ்யம் - தி. மாலைக்குள் புகுந்த அச்சம்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

ஆன்மீக நகரமாக கருதப்படும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி விழா நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல அதிகமாக சாமியார்கள் எனக் கூறிக்கொண்டு பல்வேறு நபர்கள் விதவிதமாக திருவண்ணாமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை தேரடி வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கார் அனைவருக்கும் அச்சத்தை கொடுத்தது. காரணம் அந்தக் காரின் முன் பக்கத்தில் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இது குறித்து போலீஸாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் அந்தக் கார் யாருடையது என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அந்தக் காரின் முன் பக்கத்தில் உள்ள டேஷ்போர்டில் நான்கிற்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் அடுக்கபட்டிருந்தது. காரின் முன்பக்கம் வாகன பதிவு எண் இல்லாமல் 'அகோரி, நாகா சாது' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.  காரின் பல இடங்களில் டேஞ்சர் டேஞ்சர் எனவும் மண்டை ஓடு புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தது. உள்ளே ஒருவர் உடல் முழுவதும் சாம்பல் மற்றும் உத்திராட்ச மாலைகள் அணிந்தபடி அமர்ந்திருந்தார். அந்த நபரிடம் விசாரித்த போது ரிஷிகேஷில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தெரிவித்துள்ளார். பார்க்கிங்கில் நிறுத்துவதற்கு இடம் கிடைக்காததால் சாலையிலேயே காரை நிறுத்தி விட்டு சென்றதாக அந்த நபர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக காரை நிறுத்திய அந்த நபருக்கு போலீசார் மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற வினோத கார் வந்தது தி.மலை பகுதி மக்களுக்கு சிறிது அச்சத்தையும் கொடுத்தது.