Published on 09/11/2021 | Edited on 09/11/2021

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், சென்னையில் இரவில் போக்குவரத்து சிக்னல் ஒன்று கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை, தியாகராய நகர் அருகே நந்தனம் பகுதியில் உள்ள சிஐடி காலனி - அண்ணா சாலை இணையும் இடத்திலிருந்த போக்குவரத்து சிக்னல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த போக்குவரத்து சிக்னல் மீது நீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.