Advertisment

மெரினாவில் சமாதிகளை அகற்றக்கோரிய வழக்கை வாபஸ் பெற்றேனா? டிராபிக் ராமசாமி

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றக்கோரிய வழக்கை நாங்கள் வாபஸ் பெறவில்லை என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைந்ததும், அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும் வழங்கப்பட்டது.

Advertisment

நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை. இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்வரை நான் ஓயமாட்டேன் என அவர் கூறினார்.

merina Traffic Ramaswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe