கோவை இரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்துக்கு எந்த விதமான அறிவிப்பு பலகை இல்லாமல் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கோவை மக்களிடம் தொடர் புகார்கள் வந்ததாக கூறி இரயில் நிலையத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு மேற்கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_143.jpg)
அப்போது பேசிய அவர், இரயில் நிலைய வாகன நிறுத்ததில் அதிக பணம் வசூலிப்பதாக வந்த புகாரைதொடர்ந்து தான் ஆய்வு செய்ய வந்தேன் என்றார். பின்னர் கொடிக்கம்பம் வைக்கக்கூடாது என்று உத்தரவு உள்ளது. ஆனால் அது முதலமைச்சருக்குத் தெரியவில்லை. அதைப்பற்றித் தெரியாமலேயே முதல்வர் அறிக்கை விடுகிறார். உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்து தெரியாமல் இருப்பவருக்கு முதலமைச்சர் பதவியில் இருக்க லாயக்குஇல்லை. அவர் ராஜினாமா செய்துவிட்டு போகலாம் என்று சாடினார்.
இதைத்தொடர்ந்து பேனர், கொடிக்கம்பம் வைப்பதற்கு போலீசார் உடந்தையாக இருப்பதற்கும், ஆதாரத்தை ஆழிப்பதற்கும் அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அவர்களை அரசியல்வாதிகள் கேலிக்கூத்தாக மாற்றி வருகிறார்கள் என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)