Advertisment

‘சொல்ல வேண்டியதுதானே அங்கு பாதையில்லை என்று?’ - லாரியால் சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்

Traffic jam on Kulithalai-Manapparai road near Karur

கரூர் அருகே குளித்தலை - மணப்பாறை செல்லும் ரயில்வே கேட்டை கடக்க முயன்றலாரி ஒன்று பிரேக் டவுன் ஆனதால்நள்ளிரவு 12 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Advertisment

கரூர் மாவட்டம்குளித்தலையில் மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து பருத்தி பேரல்களை ஏற்றிக்கொண்டு மணப்பாறை செல்வதற்காக வந்த லாரி ஒன்று ரயில்வே கேட்டைக்கடக்கமுயன்றபோது ரயில்வே கேட் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளஉயரத்தடுப்பில்செல்லமுடியாமல் மீண்டும் பின்னால் லாரியை எடுக்க முயன்றபோது கிளட்ச் கட்டாகிபிரேக் டவுன் ஆகி அங்கேயே நின்றது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் தட்டுத் தடுமாறிச் செல்லும் சூழல் உருவானது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த இரயில்வே கேட்டின் அருகே கடந்த சுமார் 10 மணி நேர அவதிக்குப் பிறகு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு பின்னர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்குப் பின்னர் போக்குவரத்து சீரானது.

traffic karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe