Skip to main content

அதிமுக பேரணியால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் அவதி 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Traffic jam due to AIADMK rally in Guindy

 

விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்ன மலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர். இந்த பேரணியில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

 

இதனையொட்டி சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அரசு பேருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்