Skip to main content

முதல்வர் எடப்பாடிக்காக போக்குவரத்து முடக்கம்... சாலையில் காக்கவைக்கப்பட்ட மக்கள்!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாள் பயணமாக வேலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளார். ஜீலை 27ந்தேதி வாணியம்பாடி, ஆம்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர், ஜீலை 28ந்தேதி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்தார். 

 Traffic freeze for the Chief Minister...


ஞாயிற்றுக்கிழமை 4.30 – 6.00 ராகுகாலம் என்பதால் 4 மணிக்கு பிரச்சாரத்துக்கு புறப்பட்டுவிடலாம் என முதல்வர் கூறியுள்ளார். இதற்காக அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலில் இருந்து 4 மணிக்கு கிளம்புவதாக காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளனர். அவர்களும் 4 மணிக்கு முதல்வர் கிளம்புகிறார் என அவர் செல்லும் கிரின் சர்க்கிள் என்கிற பகுதியில் 30 நிமிடம் வாகன போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர் போலிஸார். அதுமட்டும்மல்ல காட்பாடி சாலை முழுவதும் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நொந்துப்போய்வுள்ளனர்.

 Traffic freeze for the Chief Minister...


4 மணிக்கு ஹோட்டலில் இருந்து கிளம்புவதாக சொல்லப்பட்டாலும் 4.25 மணிக்குதான் ஹோட்டலில் இருந்து புறப்பட்டாறாம் முதல்வர். அவர் ஒவ்வொரு பகுதியாக கடந்த பின்பே வாகனங்களை செல்ல அனுமதித்துள்ளனர் பாதுகாப்புக்கு நின்றுயிருந்த போலிஸார். இதனால் கூமார் ஒவ்வொருயிடத்திலும் 40 நிமிடம் காத்திருந்த பொதுமக்கள் முதல்வர் பழனிச்சாமியை திட்டியபடியே சென்றுள்ளனர்.

 Traffic freeze for the Chief Minister...


மறைந்த ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோதுதான், அவர் கோட்டைக்கும், வீட்டுக்கும், வேறு எங்கு சென்றாலும் மணிக்கணக்கில் போக்குவரத்தை நிறுத்தி தங்களது ராஜ விசுவாசத்தை காட்டிய காவல்துறை. எடப்பாடிக்கும் அதேப்போன்று செய்து மக்கள் வெறுப்பை உருவாக்கி தருகிறது.

 

சார்ந்த செய்திகள்