Traffic diversion on OMR Road

சென்னைஓஎம்ஆர்சாலையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம்செய்யப்படுவதாகச்சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஓஎம்ஆர்சாலையில் சோதனை அடிப்படையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி,சோழிங்கநல்லூரிலிருந்துடைடல்பார்க்நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

மேலும்காமாட்சிமருத்துவமனைசந்திப்பிலிருந்துசோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள்பிஎஸ்ஆர்மால்அருகே இடதுபுறம் (ராஜீவ்காந்திசாலையில்) திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூடர்ன்மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல்,கார்ப்பரேஷன்சாலையிலிருந்துதுரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள்ராஜீவ்காந்திசாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய ‘யூ’திருப்பத்தில் (U Turn) சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.