Advertisment

பாலம் சீரமைப்பு - சென்னைக்குள் நுழைய முடியாமல் பொதுமக்கள் சிரமம்!

்ு

செங்கல்பட்டு அருகே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி மாமண்டூர் இடையே உள்ள பழமைவாய்ந்த பாலத்தில் சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டு அதில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் குறிப்பிட்ட அந்த பகுதியில் வாகனங்கள் மிகவும் சீராக சாலையை கடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை சீராக அனுப்பிவைத்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் சரியாகும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisment

Bridge highways
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe