Advertisment

போக்குவரத்து நெரிசலா... சென்னைக் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

Traffic congestion ... Important announcement of the Chennai Police!

'நிவர்' புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 80கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும்வேகம்13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 85 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டரிலும்புயலானது நிலைகொண்டுள்ளது.

Advertisment

'நிவர்' புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர் தேங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்குஅழைக்க காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 9498186868, 9444322210, 9962532321 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான உதவிகளைக்கோரலாம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Chennai nivar cyclone
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe