Advertisment

பழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் கடவுளான முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் இன்னும் சில தினங்களில் தைப்பூச திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்காக காரைக்குடி,தேவகோட்டை, மணப்பாறை, மதுரை, தேனி, உடுமலை, பொள்ளாச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

pazhani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இப்படி வரும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்துமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதுபோல் தேனியிலிருந்து பழநி வழியாக கோவை செல்லும் பஸ்கள் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் தேனியிலிருந்து பெரியகுளம், வத்தலகுண்டு, செம்பட்டி வழியாக வந்து பழனி பைபாஸ் மூலமாக ரெட்டியார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், புது தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும். அதுபோல் மதுரையில் இருந்து பழனி செல்லும் பஸ்கள் திண்டுக்கல்- பழனி பைபாஸ் ரோடு வழியாக ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு மூலம் தொப்பம்பட்டி, புது தாராபுரம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

pazhani

அதுபோல் தேனி மதுரையில் இருந்து கோவை செல்லும் லாரிகள் செம்பட்டி சந்திப்பிலிருந்து வத்தலகுண்டு பைபாஸ், பழனி பைபாஸ், தாடிக்கொம்பு அவரோடு இடையகோட்டை, கள்ளிமந்தயம் சந்திப்பு, தாராபுரம் வழியாக கோவை செல்ல வேண்டும். அதுபோல் தேனி, மதுரை, திண்டுக்கல்லிருந்து கோவை செல்லும் கார்கள் முருக பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தால் செம்பட்டி சந்திப்பு, வத்தலகுண்டு பைபாஸ், பழனி பைபாஸ், ரெட்டியார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு வழியாக கோவைக்கும் . கூட்டம் அதிகமாக இருந்தால் அதிலிருந்து தாடிக்கொம்பு, ரோடு சந்திப்பு புதிய தாராபுரம் ரோடு வழியாக கோவை செல்ல வேண்டும்.

இதுபோல் கேரளா, திருப்பூர், கோவையில் இருந்து மதுரை செல்லும் லாரிகள் மற்றும் கோவையில் இருந்து மதுரை செல்லும் கார்கள் பஸ்களுக்கும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Festival pazhani thaipoosam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe