Skip to main content

பழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ் கடவுளான முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில்  இன்னும் சில தினங்களில் தைப்பூச திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்காக காரைக்குடி,தேவகோட்டை, மணப்பாறை, மதுரை, தேனி, உடுமலை, பொள்ளாச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

pazhani

 

இப்படி வரும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதுபோல் தேனியிலிருந்து பழநி வழியாக கோவை செல்லும் பஸ்கள் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் தேனியிலிருந்து பெரியகுளம், வத்தலகுண்டு, செம்பட்டி வழியாக வந்து பழனி பைபாஸ் மூலமாக ரெட்டியார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், புது தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும். அதுபோல் மதுரையில் இருந்து பழனி செல்லும் பஸ்கள் திண்டுக்கல்- பழனி பைபாஸ் ரோடு வழியாக ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு மூலம் தொப்பம்பட்டி, புது தாராபுரம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

 

pazhani

 

அதுபோல் தேனி மதுரையில் இருந்து கோவை செல்லும் லாரிகள் செம்பட்டி சந்திப்பிலிருந்து வத்தலகுண்டு பைபாஸ், பழனி பைபாஸ், தாடிக்கொம்பு அவரோடு இடையகோட்டை, கள்ளிமந்தயம் சந்திப்பு, தாராபுரம் வழியாக கோவை செல்ல வேண்டும். அதுபோல் தேனி, மதுரை, திண்டுக்கல்லிருந்து கோவை செல்லும் கார்கள் முருக பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தால் செம்பட்டி சந்திப்பு, வத்தலகுண்டு பைபாஸ், பழனி பைபாஸ், ரெட்டியார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு வழியாக கோவைக்கும் . கூட்டம் அதிகமாக இருந்தால் அதிலிருந்து தாடிக்கொம்பு, ரோடு சந்திப்பு புதிய தாராபுரம் ரோடு வழியாக கோவை செல்ல வேண்டும். 

 

இதுபோல் கேரளா, திருப்பூர், கோவையில் இருந்து மதுரை செல்லும் லாரிகள் மற்றும் கோவையில் இருந்து மதுரை செல்லும் கார்கள் பஸ்களுக்கும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.