Advertisment

போக்குவரத்து மாற்றம்; உணவகங்களை மூட உத்தரவு

 Traffic change; Order to close restaurants

Advertisment

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன.

அதிகாலையில் இருந்தே பெரும்பாலான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். காலை 10 மணிக்கு மேல்தான் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே தொண்டர்கள் உள்ளே புகுந்து நாற்காலிகளில் இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் காரணமாக மாநாட்டு திடலில் நிரம்பி இருந்த தொண்டரில் ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமில் அனுமதித்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாநாட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தொண்டர்கள் முன்னதாகவே முண்டியைத்துக்கொண்டு இருக்கைகளில் அமர்ந்ததால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. காவல்துறையும் கட்சி நிர்வாகிகளும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வந்திருக்கும் தொண்டர்களை அழைத்து வரும் நிர்வாகிகளே காலை உணவையும், மதிய உணவையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால் பலர் உணவு இல்லாமல் அங்கு அவதிப்பட்டு அங்கே உள்ள பானிபூரி மற்றும் கூழ் கடைகளில் குவிந்துள்ளனர்.

Advertisment

தொடர்ந்து வி.சாலை பகுதிக்கு அதிகமான வாகனங்கள் படையெடுத்து வருவதால் மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கூட்டேரிப்பட்டு, மயிலம் வழியாக விழுப்புரம் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் செஞ்சி வழியாக திண்டிவனம் செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் உள்ள உணவகங்களை மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

police traffic tvk
இதையும் படியுங்கள்
Subscribe