Skip to main content

'மாட்டு வண்டி பயணம்..மனைவியை தூக்கி வந்த கணவன்'- பண்பாட்டு முறைப்படி பட்டையை கிளப்பிய திருமணம்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

திருமண முறைகள் மாறிப் போன இந்த காலத்தில் பழங்கால பண்பாட்டை நினைவு படுத்தும் விதமாக ஈரோட்டில் ஒரு திருமணம் நடைபெற்றது. 

எடப்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்-வனஜா தம்பதியினரின் மகன் ஜெயக்குமார். இவர் தனியார் துறையில் பனியாற்றி வருகிறார். கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி-பூங்கோதையின் மகள் வனஜா. இவர்களின் திருமணம் இன்று காலை கோபிசெட்டிபாளையம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

 Traditional wedding ceremony



பிறகு மாலை மணமகள் வீட்டுக்கு மணமக்கள் புறப்பட்டனர். இப்போதெல்லாம் புது மணமக்கள் புத்தம் புதிய சொகுசு கார்களில் பயணம் செய்வது வழக்கமாக இருந்தாலும் பாராம்பரிய முறைப்படி இந்த மணமக்கள் இரட்டைமாட்டு வண்டியில் மணமகள் வீட்டுக்கு பயணமானார்கள். 

 

 Traditional wedding ceremony



அதே போல மனமகளின் தாய் வீடு வந்ததும் மனமகன், தனது மனைவியை மாட்டு வண்டியிலிந்து கைகளால் தூக்கி வந்து தாய் வீட்டில் இறக்கினார். இந்த செயல் அந்தப் பகுதி கிராம மக்களை ஆச்சரியப்படுத்தியதோடு இளைய தலைமுறைக்கு பழைய பண்பாட்டு முறையை எடுத்துக் காட்டியதாக அமைந்தது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் குழந்தைகளை காக்க ‘கொப்பி கொட்டல்’ திருவிழா நடத்தும் கிராம மக்கள்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

koppi kottal festival celebrated in pudukottai district seriyalur village 

 

புதுக்கோட்டையில் கிராமத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்தும் வித்தியாசமான திருவிழா ஒன்று காலங்காலமாக நடந்து வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தனது பெரியப்பா வீட்டுக்கு காட்டு வழியாக செல்லும் போது காணாமல் போயுள்ளார். பல நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தின் அருகில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அந்த சிறுமி இறந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்கள் பல்வேறு சடங்குகளை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் நோய் நொடியிலிருந்து ஊரைக் காக்க பொங்கலுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண்பொங்கல் வைக்க வேண்டும்.

 

மேலும், கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும் 92 சாணக் கொழுக்கட்டைகளும் பிடித்து, அதில் கிருமி நாசினிகளான கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை போன்றவற்றை வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடியில் படையல் வைக்கின்றனர். இந்த விழாவில் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக் கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர்.

 

அதில், ஊர் மக்கள் அனைவரும் வழிபாடு செய்த நிலையில், பெண் குழந்தைகளின் வழிபாடு முடிகிறது. மேலும், 'கொப்பி கொட்டல்' என்பதே குறிப்பிட்ட திருவிழா நடக்கும் இடத்தின் பெயராக உள்ளது. அதுமட்டுமின்றி, தைத்திருநாளை கிராம மக்கள் ஆட்டம்பாட்டத்துடன் வரவேற்கும் வகையில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்த விளையாட்டில் தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்து உடைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. 

 

 

 

Next Story

சிறுமிக்கு பாலியல் தொல்லை பிரபல பரத நாட்டிய ஆசிரியர் போக்ஸோவில் கைது! 

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

ஆவடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பரதநாட்டிய ஆசிரியரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி அடுத்த கோயில்பதாகை, கிறிஸ்து காலனி, அன்னை தெரசா 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியம் (53). இவர், கடந்த 6 ஆண்டாக வீட்டில் பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.  இவரது பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பரதநாட்டியம் கற்று வருகிறார். இவர், ஆவடி டேங்க்பேக்டரி பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த மாதம் 29ம் தேதி இச்சிறுமி பரதநாட்டியம் கற்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். 

 

incident



இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி வழக்கம்போல் நடனப்பள்ளிக்குச் சென்ற சிறுமியை பாலசுப்ரமணியம் தனியாக அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து நடனம் கற்க செல்லமாட்டேன் என்று கூறி பெற்றோரிடம் மாணவி அடம்பிடிக்க, அவரிடம் விசாரித்ததில் பாலசுப்ரமணியம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து நாட்டிய பள்ளியை சுமார் 50 பேர் முற்றுகையிட்டு நேற்றிரவு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் பாலசுப்ரமணியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பொதுமக்கள் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் அளித்ததையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்பு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவிசர்மாவை நேற்று மாலை போலீசார்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.