Skip to main content

கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும்: ஜெயராமன் வேண்டுகோள்!

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
sd


கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் ரகங்களை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்கிறார் நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன்.

திருத்துறைப்பூண்டியில் விவசாய கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். "இந்தியாவிலேயே இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், மறுஉற்பத்தி செய்வதிலும் தேசிய அளவில் கேரளத்துக்குப் பெரும் பங்கு உண்டு. கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் கெளடியாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தணல் என்ற அமைப்பு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், பரவலாக்குவதிலும், மறுஉற்பத்தி செய்வதிலும் பெரும் முயற்சி எடுத்து, கடந்த 2004-ஆம் ஆண்டு கொச்சி அருகே கும்பளங்கி என்ற பகுதியில், தேசிய அளவில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கத்தை நடத்தியது.

இவ்விழாவை தலைமையேற்று நடத்திய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கை வேளாண்மையையும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதுமே தேசிய அளவில் வேளாண்மையில் பெரும் மாற்றத்தைத் தரும் என்று பேசினார்.

கேரளத்தில் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை மீட்டெடுக்க வேண்டும். கேரள வெள்ள நிவாரண நிதியாக கடந்த ஜூலை மாதம் தனக்கு கிடைக்கப்பெற்ற மதிப்பூதியமான ரூ.17000-ஐ முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளேன். அனைவரும் அவர்களுக்கு உதவிட முன்வரவேண்டும்". என்றார்.

 

சார்ந்த செய்திகள்