Advertisment

பாரம்பரியம் மாறாத பனை ஓலைப் பட்டை கஞ்சி!

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்க தனியார் அமைப்புகள் பனை விதையை விதைத்து வருகின்றனர். காரணம் பனை மரமும் அதன் மகத்துவமும் நாளடைவில் இந்த மண்ணில் இருந்து அழிந்து விடக்கூடாது என்பதற்காக தான் அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பனை மரத்தின் ஓலையின் மகத்துவமும் தமிழ் மக்களிடமிருந்தும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இன்று (12/03/2020) குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியில் 150 ஆண்டுகளுக்கு மேல் பூச்சிக்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் பனை ஓலையில் கஞ்சி குடித்து அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

Advertisment

Traditional Palm Tail kanniyakumari temple festival

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மண்டைக்காடு திருவிழாவையொட்டி 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் மதியம் வழங்கப்படும் கஞ்சியும் பூசணிக்காய் கூட்டும் பனை ஓலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என பனை ஓலைப் பட்டையில் கஞ்சி குடிக்க குவிகிறார்கள். அங்கு பட்டையை கையில் ஏந்தி கஞ்சி வாங்கி குடிக்கும் மக்கள் இதன் ருசியோ வேறு எதிலும் கிடைக்காது. இதே கஞ்சியை பாத்திரத்தில் குடித்தால் ருசி இருக்காது. அதை பனை ஓலைப் பட்டையில் குடித்து பாருங்கள் உங்களுடைய ஆயுசும் கூடும் ருசியும் அந்த மாதிரியும் இருக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

Advertisment

Traditional Palm Tail kanniyakumari temple festival

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஒரு காலத்தில் பனை ஓலை என்பது மிட்டாய் கடைகளிலிருந்து கல்யாண சீர்வரிசை பெட்டிகள் என அலங்கரித்தன. பனை ஓலையில் வைக்கப்படும் உணவு பொருட்கள் பல நாட்கள் கெடாமல் இருக்கும். பூவோடு சோ்ந்த நாறும் மணப்பது போல பனை ஓலை பெட்டியில் வைக்கபடும் உணவு பொருட்களும் தனி மணத்தையும் மகத்துவத்தையும் உடலுக்கு ஏற்படுத்தும். திருவிழா காலங்களில் உறவினா்கள் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் போது கடைகளில் பனை ஓலைப் பெட்டிகளில் வைத்திருக்கும் தின்பண்டங்களைவாங்கிச் செல்லக்கூடிய காலங்கள் இன்றைக்கு மலை ஏறி போய்விட்டது.

Traditional Palm Tail kanniyakumari temple festival

ஆனால் பனை ஓலையின் மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து அதை பயன்படுத்தும் விதமாக பூச்சிக்காடு பத்திரகாளி அம்மன் கோவிலில் காலகாலமாக தொடரும் பனை ஓலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் கஞ்சி குறித்து அந்தக் கோவில் நிர்வாகிகளிடம் பேசினோம். நாகரிகத்தின் வளர்ச்சியால் அழிந்து போன பனை ஓலையில் மூன்றாவது தலைமுறையாக கோவில் திருவிழாவில் பனை ஓலைப்பட்டையில் கஞ்சி பரிமாறி வருகிறோம். இதற்காக ஆண்டுதோறும் அலைந்து திரிந்து பனை மரத்தை கண்டு பிடித்து ஓலை வெட்டி வருகிறோம். இதன் மூலம் பாரம்பரியத்தையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடத்திலையாவது அழியாமல் வளா்க்கிறோம் என்பது பெருமையாக உள்ளது.

இங்கு சாமி கும்பிடுவதற்கு வருகிறவர்களை விட பனை ஓலை பட்டையில் வயிறு நிறைய பசி தீர்க்கிற அளவுக்கு கஞ்சி குடிக்க வருகிறவர்கள் தான் அதிகம். இதில் சிலர் கஞ்சி குடித்து விட்டு பனை ஓலைப் பட்டைய வீசி எறியாமல் அதை பெட்டி செய்வதற்காக வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் பனை ஓலைகளை பயன்படுத்துவதன் மூலம் பனை மரங்களையும் பாதுகாக்க உதவும் என்றனர்.

palm tree temple festival Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe