Skip to main content

பாரம்பரியம் மாறாத பனை ஓலைப் பட்டை கஞ்சி!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்க தனியார் அமைப்புகள் பனை விதையை விதைத்து வருகின்றனர். காரணம் பனை மரமும் அதன் மகத்துவமும் நாளடைவில் இந்த மண்ணில் இருந்து அழிந்து விடக்கூடாது என்பதற்காக தான் அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பனை மரத்தின் ஓலையின் மகத்துவமும் தமிழ் மக்களிடமிருந்தும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இன்று (12/03/2020) குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியில் 150 ஆண்டுகளுக்கு மேல் பூச்சிக்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் பனை ஓலையில் கஞ்சி குடித்து அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

Traditional Palm Tail kanniyakumari temple festival

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மண்டைக்காடு திருவிழாவையொட்டி 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் மதியம் வழங்கப்படும் கஞ்சியும் பூசணிக்காய் கூட்டும் பனை ஓலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என பனை ஓலைப் பட்டையில் கஞ்சி குடிக்க குவிகிறார்கள். அங்கு பட்டையை கையில் ஏந்தி கஞ்சி வாங்கி குடிக்கும் மக்கள் இதன் ருசியோ வேறு எதிலும் கிடைக்காது. இதே கஞ்சியை பாத்திரத்தில் குடித்தால் ருசி இருக்காது. அதை பனை ஓலைப் பட்டையில் குடித்து பாருங்கள் உங்களுடைய ஆயுசும் கூடும் ருசியும் அந்த மாதிரியும் இருக்கும் என்கின்றனர் பக்தர்கள். 

Traditional Palm Tail kanniyakumari temple festival

ஒரு காலத்தில் பனை ஓலை என்பது மிட்டாய் கடைகளிலிருந்து கல்யாண சீர்வரிசை பெட்டிகள் என அலங்கரித்தன. பனை ஓலையில் வைக்கப்படும் உணவு பொருட்கள் பல நாட்கள் கெடாமல் இருக்கும். பூவோடு சோ்ந்த நாறும் மணப்பது போல பனை ஓலை பெட்டியில் வைக்கபடும் உணவு பொருட்களும் தனி மணத்தையும் மகத்துவத்தையும் உடலுக்கு ஏற்படுத்தும். திருவிழா காலங்களில் உறவினா்கள் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் போது கடைகளில் பனை ஓலைப் பெட்டிகளில் வைத்திருக்கும் தின்பண்டங்களை வாங்கிச் செல்லக்கூடிய காலங்கள்  இன்றைக்கு மலை ஏறி போய்விட்டது. 

Traditional Palm Tail kanniyakumari temple festival

ஆனால் பனை ஓலையின் மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து அதை பயன்படுத்தும் விதமாக பூச்சிக்காடு பத்திரகாளி அம்மன் கோவிலில் காலகாலமாக தொடரும் பனை ஓலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் கஞ்சி குறித்து அந்தக் கோவில் நிர்வாகிகளிடம் பேசினோம். நாகரிகத்தின் வளர்ச்சியால் அழிந்து போன பனை ஓலையில் மூன்றாவது தலைமுறையாக கோவில் திருவிழாவில் பனை ஓலைப் பட்டையில் கஞ்சி பரிமாறி வருகிறோம். இதற்காக ஆண்டுதோறும் அலைந்து திரிந்து பனை மரத்தை கண்டு பிடித்து ஓலை வெட்டி வருகிறோம். இதன் மூலம் பாரம்பரியத்தையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடத்திலையாவது அழியாமல் வளா்க்கிறோம் என்பது பெருமையாக உள்ளது.


இங்கு சாமி கும்பிடுவதற்கு வருகிறவர்களை விட பனை ஓலை பட்டையில் வயிறு நிறைய பசி தீர்க்கிற அளவுக்கு கஞ்சி குடிக்க வருகிறவர்கள் தான் அதிகம். இதில் சிலர் கஞ்சி குடித்து விட்டு பனை ஓலைப் பட்டைய வீசி எறியாமல் அதை பெட்டி செய்வதற்காக வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் பனை ஓலைகளை பயன்படுத்துவதன் மூலம் பனை மரங்களையும் பாதுகாக்க உதவும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.