Skip to main content

காவிரி விவகாரம்: ஏப்.3ம்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் - விக்கிரமராஜா அறிவிப்பு

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
vikram sm


காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.3-ம் தேதி தமிழகம் தழுவிய ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.3-ம் தேதி தமிழகம் தழுவிய ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குழுவைச் சார்ந்த அனைத்து வணிக அமைப்புகளும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

வியாபாரிகளும், விவசாயிகளும் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்தவர்கள் என்பதால் காவிரி பிரச்சினைக்காக ஒருமித்த முடிவோடு இந்த கடை அடைப்பு நடைபெறுகிறது. பா.ம.க.வினர் 11-ந்தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்து ஒரே கடை அடைப்பு போராட்டமாக 3-ந்தேதி நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

எங்களது கடை அடைப்பு போராட்டத்துக்கும் அ.தி.மு.க.வின் உண்ணாவிரதத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் போராட்டம் நடத்தவில்லை. நாங்கள் ஏற்கனவே 29-ந்தேதி எடுத்த முடிவின் படி 3-ந்தேதி கடையடைப்பு நடத்துகிறோம். இதில் 21 லட்சம் கடைகள் அடைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்