Published on 18/12/2018 | Edited on 18/12/2018

தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா பொருளாளர் கோவை தங்கம், வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், ராம்குமார், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், ஆர்.எஸ்.முத்து, விருகை முத்து, தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
