Advertisment

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

Advertisment

Traders  closed them shops in support of  Mango  farmers

வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மா விவசாயம் செய்து வரும் நிலையில் இந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்து உரிய விலை கிடைக்காததாலும், ஆந்திராவில் தமிழக மாங்காய்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க மா விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று ஒருநாள் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துக் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

மேலும் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏற்றவாறு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி வருகின்றனர்.

Farmers Vellore
இதையும் படியுங்கள்
Subscribe