/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a435.jpg)
ஈரோட்டில் பழக்கடை வியாபாரி கலெக்டர்அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (38). பழ வியாபாரி. இவர் குமலன் குட்டை பகுதியில் சாலையோரம் சிறிய சரக்கு வாகனத்தில் அவரது மனைவியுடன் கொய்யா, வெள்ளரி விற்பனை செய்து வருகிறார்.
நேற்று தினேஷ் வழக்கம் போல் வாகனத்தை நிறுத்தி பழ வியாபாரத்தை துவங்கிய போது, அதே பகுதியைச் சேர்ந்த இரும்பு கடைக்காரர் மற்றும் லாரி டிரைவர் ஒருவர் தினேஷ் வாகனத்தை மட்டும் நிறுத்தக்கூடாது என தகராறு செய்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தினேஷ் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மற்றும் பொதுமக்கள் தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து தினேஷை ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)