Corona spread; The trade union bargainers who made welfare assistance apart from the conference ...!

Advertisment

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை முன்னிட்டு மே 5ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற பெரும் நகரங்களில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஐந்தாம் தேதி வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடத்தி, தங்களது ஒற்றுமையை நிலைநாட்டி வந்தனர். தற்போது கரோனா பரவலின் இரண்டாவது அலை அனைவரையும் கடுமையாகப் பாதித்துள்ளதால், இந்த ஆண்டுக்கான இம்மாநாடு நடத்துவதை ரத்து செய்துள்ள வணிகர் சங்க பேரமைப்பு, அதற்கு பதிலாக சென்னையில் உள்ள எளிய வணிகர்களுக்கும், ஏழைக் குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும், வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றையும் வழங்கினர்.

மேலும், தமிழகம் முழுவதும் வணிகர்கள் இதுபோன்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என இவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி திட்டக்குடி நகரில் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி தங்கராசு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.