/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A677.jpg)
தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முடித்துக் கொண்டு டிராக்டர் திரும்பிய பொழுது கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டிராக்டரில் விநாயகர் சிலைடன் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டிராக்டர் திரும்பிய பொழுது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.இரவில் நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மொத்தமாக அந்த டிராக்டரில் 10 பேர் பயணித்த நிலையில் இரண்டு சிறுவர்கள் ஆபத்தான முறையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள ஏழு பேர் சிறுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)