"அரசியலில் அனுபவம் மட்டும் போதாது..அதிர்ஷ்டமும் வேண்டும்" - டி.ஆர் தடாலடி!

வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட இருக்கும் டி.ராஜேந்தர்அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Tr

அப்போது, வினியோகஸ்தர் சங்கத்தில் எந்த பிரச்சனை என்றாலும் ஓடிப்போய் நின்றிருக்கிறேன். 537 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட வினியோகிஸ்தர்கள் சங்கத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்தான் தாய்வீடு. இங்கு மாற்றம் வந்தால்தான், தமிழ்நாடு முழுவதும் தடுமாற்றம் இன்றி செல்லும் என தெரிவித்தார்.

பின்னர் திரைப்படத்துறைதான் எங்களுடைய முதல் இனம். என்னுடைய முதல் ஜாதி. அப்படிப்பட்ட இந்த சினிமா வாழ்வதற்கு என்னுடைய எண்ணம், அரசியல் வண்ணம் எல்லாவற்றையும் கீழே கழட்டி வைத்துவிட்டு வந்துள்ளேன் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ரஜினி மற்றும் கமல் அரசியலில் சூழ்நிலை ஏற்பட்டால் இணைவோம் என்று கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ரஜினி-கமல் எனக்கு முன்பே சினிமாவில் இருக்கக் கூடிய சினியர்ஸ். அவர்களை விட அரசியலில் வேண்டுமானால், தான் கொஞ்சம் அனுபவசாலியா இருக்கலாம் என்றார். பின்னர்அனுபவம் மட்டும் அரசியலில் வெற்றி பெற்றுவிடாது. அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அனுபவமும் வேண்டும், அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சிரித்தபடி கூறினார்.

cinema elections kamalhaasan politics rajini TR
இதையும் படியுங்கள்
Subscribe