Advertisment

"தலையில் இடிவிழுந்தது போல இருக்கிறது அவரின் மரணம்.." - டி.ஆர் பாலு இரங்கல்!

k;

Advertisment

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மறைந்தார். கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த அவர், கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக கலைஞர் அவரை நியமித்து கொண்டார். கலைஞரின் நிழல் என்று திமுகவினரால் அழைக்கப்பட்ட அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக மூத்த தலைவர்கள் கருத்து கெரிவித்துள்ளார்கள்.

கலைஞரின் மனநிலை அறிந்து அவர் கூறும் முன்னரே அவர் நினைக்கும் காரியத்தை திறம்பட முடிக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம் உண்டு. இதனை பல மேடைகளில் கலைஞர் அவர்களே நேரடியாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு அவரை நேரடியாக சந்தித்து உடல்நலம் விசாரித்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இயற்கை எய்தியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கூறும்போது, " கலைஞர் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் சண்முகநாதன்; அவரின் மறைவு தலையில் இடிவிழுந்தது போன்ற துயரத்தை அளித்துள்ளது" என்றார்.

dmk mp tr balu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe