Advertisment

உதயநிதி மட்டும் கைது ஏன்?-டி.ஜி.பி அலுவகலத்தில் டி.ஆர்.பாலு புகார் (படங்கள்)   

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் திமுகவும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்க திட்டமிட்டு சென்றிருந்தார். ஆனால்விதியைமீறியதாகஅவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Advertisment

இதுகுறித்து திமுக பொருளாளர்டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. வில்சன் ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் கைதைகண்டித்து டி.ஜி.பிதிரிபாதியிடம் புகார் தந்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம்பேசியடி.ஆர்.பாலு,மற்றவர்களை கைது செய்தால் மாலை 4 மணிக்கு விட்டுவிடுகிறார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினை பல மணி நேரம் காக்க வைத்துவிடுதலை செய்கிறார்கள்.கைது என்பதும், போராட்டம், சிறை,சித்திரவதை என்பதும் நாங்களெல்லாம் பார்த்த ஒன்றுதான். நேற்று அதிமுகநடத்திய அரசு விழாவில்விதி பின்பற்றப்பட்டதா? அராஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.இதற்குடிஜிபி நடவடிக்கை எடுக்கவேண்டும்என்றார்.

Advertisment
admk udhayanidhistalin tr balu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe