Toys without ISI stamp seized at OMR

Advertisment

சென்னை ஓ.எம்.ஆர் சாலை பகுதியில் உள்ள பொம்மை கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை இந்தியதர நிர்ணய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பிரபல கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. புகார்களின் அடிப்படையில் இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு அங்கிருந்து முத்திரைகள் இல்லாத 817 பொம்மைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதுபோல் அண்மையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்அருகில் உள்ள பொம்மை கடைகளிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தகுந்தது.